Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ?

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில்  பிரபல பாலிவுட் நடிகை ?

13 கார்த்திகை 2025 வியாழன் 12:36 | பார்வைகள் : 215


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘மா வந்தே’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. இதில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் மோடியாக நடிக்கிறார். வீர் ரெட்டி தயாரிக்கும் இத்திரைப்படத்தை கிராந்திகுமார் இயக்குகிறார்.

இதற்கிடையில், இப்படத்தில் ஒரு நட்சத்திர கதாநாயகி பிரதமர் மோடியின் தாயாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடிக்கு தனது தாயார் ஹீராபென் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் உண்டு. எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தனது பிறந்தநாளை எப்போதும் தாயாருடன் கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில், இப்படத்தில் பிரதமர் மோடியின் தாய் ஹீராபென்னாக பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தாண்டன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்