Paristamil Navigation Paristamil advert login

“நான் குடியரசுத் தலைவர்”:அணையா விளக்கின் மீது அமர்ந்த இளைஞர் கைது!!

“நான் குடியரசுத் தலைவர்”:அணையா விளக்கின் மீது அமர்ந்த இளைஞர் கைது!!

13 கார்த்திகை 2025 வியாழன் 20:25 | பார்வைகள் : 600


புதன்கிழமை காலை, பரிசின் 8ஆம் வட்டாரத்தில் உள்ள ஆர்க் டி த்ரியோம்ப் (l’Arc de Triomphe) நினைவுச்சின்னத்தின் கீழ் அமைந்துள்ள தெரியாத வீரனின் கல்லறையின் மீது 23 வயது இளைஞர் ஒருவர் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர் தன்னை “பிரான்ஸ் குடியரசுத் தலைவர்” என்று அறிவித்ததுடன், சீரற்ற வார்த்தைகள் பேசியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எந்தவித சேதமும் ஏற்படாததால், அவர் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த அக்டோபரில் 51 வயது பெண் ஒருவர் அதே இடத்தில் கல்லறையை அவமதித்ததை நினைவூட்டுகிறது. அவர் வீரர்களுக்காக வைக்கப்பட்ட மலர்களை சேதப்படுத்தியிருந்தார். வழக்கறிஞராக இருந்த அந்தப் பெண் கைது செய்யப்பட்டு, மது மற்றும் போதைப்பொருள் பாவித்தமை உறுதிசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்