இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது இவரா ?
15 கார்த்திகை 2025 சனி 15:06 | பார்வைகள் : 181
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்கள் ஆகிவிட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே இரண்டு பேர் வெளியேறினர். அதில் நந்தினி சில காரணங்களால் பாதியிலேயே வாக் அவுட் செய்தார். அந்த வாரம், நடைபெற்ற எவிக்ஷனில் பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து இரண்டாவது வாரத்தில் அப்சரா, மூன்றாவது வாரம் ஆதிரை, நான்காவது வாரம் கலையரசன், ஐந்தாவது வாரம் துஷார் மற்றும் பிரவீன் என இதுவரை 7 பேர் எலிமினேட் ஆகி இருக்கிறார். இதற்கு ஈடுகட்ட வைல்டு கார்டு எண்ட்ரியும் வந்தனர்.
பிரஜன், சாண்ட்ரா, அமித் மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர். இவர்கள் வந்த பின்னர் தான் ஆட்டம் சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் சாண்ட்ரா, திவ்யா கணேஷ், பார்வதி, விக்கல்ஸ் விக்ரம், வியானா, அரோரா, கனி, திவாகர், சுபிக்ஷா, ரம்யா ஆகிய 10 பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். இவர்களில் இருந்து இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இந்த நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்களான சாண்ட்ரா மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோர் அதிகப்படியான வாக்குகளை பெற்றதால் அவர் எலிமினேட் ஆக வாய்ப்பே இல்லை. அடுத்தபடியாக விக்கல்ஸ் விக்ரம், பார்வதி ஆகியோரும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்ததால் அவர்களும் எலிமினேஷனில் சிக்க வாய்ப்பு இல்லை. எஞ்சியுள்ள அரோரா, வியானா, கனி, சுபிக்ஷா, திவாகர், ரம்யா ஜோ ஆகியோர் கம்மியான வாக்குகளை பெற்று டேஞ்சர் ஜோனில் இருந்தனர். கனி, சுபிக்ஷா, திவாகர், ரம்யாவை காட்டிலும் அரோரா மற்றும் வியானா அதிக வாக்குகள் பெற்றதால் அவர்களும் இந்த வாரம் தப்பித்துவிட்டார்கள்.
இந்த நான்கு பேரில் திவாகர் மற்றும் ரம்யா ஜோ தான் கம்மியான வாக்குகளை பெற்றிருந்தனர். அவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக கனி திரு இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார். இந்த சீசனில் இதுவரை நாமினேஷனிலேயே சிக்காமல் எஸ்கேப் ஆகிவந்த கனி முதன்முறையாக இந்த வாரம் நாமினேஷனில் சிக்கினார். அதோடு அவர் எலிமினேட்டும் ஆகி இருக்கிறார். இந்த சீசனில் பைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் கனியும் ஒருவர். அவர் எலிமினேட் ஆனது பலருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan