Paristamil Navigation Paristamil advert login

‘ரௌடி அண்ட் கோ’ படத்தின் கதைக்களம் இதுதானா?

‘ரௌடி அண்ட் கோ’ படத்தின் கதைக்களம் இதுதானா?

15 கார்த்திகை 2025 சனி 16:06 | பார்வைகள் : 194


பேஷன் ஸ்டூடியோ சார்பில் சுதன் சுந்தரம் தயாரிக்கும் ‘ரெளடி அண்ட் கோ’ படத்தில் சித்தார்த்தும் ராஷி கண்ணாவும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் சுனில், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றிமணி, சார்லஸ் வினோத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘தனி ஒருவன்’ புகழ் வம்சியும் வில்லனாக நடித்துள்ளார்.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்ஃ இப்படத்திற்கு ரேவா இசையமைக்கிறார். சித்தார்த் நடித்த ‘டக்கர்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “ரவுடிகளின் கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை மையமாகக் கொண்ட கதை என்பதால் ‘ரெளடி அண்ட் கோ’ என்ற தலைப்பைத் தேர்வு செய்தோம். இது முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த எண்டர்டெயினராக இருக்கும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்