தலைமுடி கொட்டுவதற்கான காரணங்கள்
21 மார்கழி 2019 சனி 10:46 | பார்வைகள் : 12621
தலைக்கு உள்ளிருக்கும் மூளையை விட தலைக்கு வெளியில் இருக்கும் தலைமுடிக்கே அநேகமாக அனைவரும் அதிக கவலையும் அக்கரையும் கொள்கின்றனர்.
தலைமுடி உதிர்வதை தவிர்க்க முடியாது. வயது கூடுதல், பரம்பரையை பொறுத்தே முடி பொலிவு விளங்குகின்றது. இது தவிர மருத்துவ காரணங்களாலும் முடி இழப்பு ஏற்பட காரணம் உண்டு.
தலைமுடி இழப்பதோடு இமை, புருவம் இவற்றிலும் முடி இழப்பு ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
தலைமுடி இழப்போடு உடல் வலியும் கூடவே இருந்தால் தைராய்டு பரிசோதனை அவசியம்.
தலைமுடி கொட்டுதலோடு உடல் சக்தியின்று அசதியாக இருந்தால் தேவையான சத்துணவு உடலுக்கு கிடைக்கவில்லை.
தலைமுடி கொட்டுதல், நகங்கள் எளிதில் உடைதல் இவை இரும்பு சத்து குறைவு, ரத்த சோகை இவற்றினைக் குறிக்கும். சிலவகை மருந்துகள் முடி கொட்டுதலை ஏற்படுத்தும். ஆக முடி கொட்டுதலின் பொழுது பொலிவிற்கு மட்டும் கவனம் செலுத்தாமல் மருத்துவ காரணங்களையும் அறிந்து தீர்வு கொள்ள வேண்டும்.


























Bons Plans
Annuaire
Scan