Paristamil Navigation Paristamil advert login

பாதுகாப்பை தாண்டி லூவ்ரில் தங்களது ஓவியத்தை தொங்கவைத்த பெல்ஜிய டிக்‌டாக்கர்கள்!!

பாதுகாப்பை தாண்டி லூவ்ரில் தங்களது ஓவியத்தை தொங்கவைத்த பெல்ஜிய டிக்‌டாக்கர்கள்!!

15 கார்த்திகை 2025 சனி 22:27 | பார்வைகள் : 384


சமூக வலைதளங்களில் தங்கள் ப்ராங்க்ஸ் (நகைச்சுவைத் தந்திரங்கள்) மூலம் பிரபலமான இரு பெல்ஜிய ஆண்கள் நீல் (Neal) மற்றும் சென்னே (Senne), லூவ்ர் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பை மீறி தங்களது ஓவியத்தை மோனா லிசா இருக்கும் அறையில் தொங்கவைத்துள்ளனர். 

LEGO கொண்டு செய்யப்பட்ட பிரிக்கக்கூடிய சட்டை மற்றும் உருட்டப்பட்ட ஓவியத்தை பயன்படுத்தி பாதுகாப்பை கடந்த அவர்கள், அருங்காட்சியகம் மூடுவதற்கு முன் ஒரு மணி நேரத்தில் உள்ளே நுழைந்து சட்டையை மீண்டும் ஒன்று சேர்த்தனர். மோனாலிசா படத்திற்குப் பக்கத்தில் பாதுகாப்பு அதிகமாக இருந்ததால், அவர்கள் அங்கே தொங்கவைக்க முடியவில்லை.

நேரப்பற்றாக்குறை இருந்த போதிலும், இருவரும் தங்களை பிரதிபலிக்கும் ஓவியத்தை அதே அறையில் வேறு இடத்தில் தொங்கவைத்துள்ளனர். கடந்த மாத கொள்ளையடிப்பிற்கு பிறகு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் இது ஆபத்தான முயற்சி என அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 

ஓவியத்தை தொங்கவைத்தவுடன் பாதுகாப்பை தூண்டாமல் உடனே வெளியேறியதாகவும், இதற்கு முன்பு பெல்ஜியத்தின் கென்ட் கலை அருங்காட்சியகத்திலும் இதே போன்ற செயலை செய்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் முன்பு 27 மணி நேரம் கழிப்பறைகளில் மறைந்து, சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியின் முனிச்சின் அலையன்ஸ் (l’Allianz Arena de Munich) அரங்கிற்குள் பதுங்கிச் சென்று,போட்டியை இலவசமாகப் பார்த்துவிட்டு, ஏற்கனவே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்