Paristamil Navigation Paristamil advert login

ஸ்வீடனில் பஸ் மோதி விபத்துக்குள்ளாகியதில் 3 பேர் பலி

ஸ்வீடனில் பஸ் மோதி விபத்துக்குள்ளாகியதில் 3 பேர் பலி

16 கார்த்திகை 2025 ஞாயிறு 10:04 | பார்வைகள் : 170


ஐரோப்பாவில் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோக் மாகாணம் ஆஸ்டர்மல்ம் நகரில் நேற்று மாலை பஸ் ஒன்று அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.

பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீதே இந்த பஸ் மோதியது. இந்த கோர சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் விபத்தா? பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்