அணுகுண்டு சோதனையில் வெற்றி கண்ட அமெரிக்கா
16 கார்த்திகை 2025 ஞாயிறு 11:04 | பார்வைகள் : 186
அமெரிக்கா தனது B61-12 அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
B61-12 என்பது Nuclear Gravity bomb ஆகும். அதாவது, இது போர் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பூமியின் ஈர்ப்பை பயன்படுத்தி வானிலிருந்து வீசப்படும் அணுகுண்டாகும்.
இந்த சோதனைகள், Sandia National Laboratories மற்றும் National Nuclear Security Administration (NNSA) இணைந்து ஆகஸ்ட் 19 முதல் 21-ஆம் திகதி வரை நெவாடா மாநிலத்தின் Tonopah Test Range-ல் நடத்தப்பட்டன.
சோதனையின்போது, Hill Air Force Base-ன் ஆதரவுடன், F12A விமானங்களில் இருந்து செயலாற்ற மாதிரிகள் (Inert units) வீசப்பட்டன.
இதன்மூலம், விமானம், விமானிகள் மற்றும் ஆயுதத்தின் முழுமையான செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டது.
NASA இந்த சோதனைகளை F-35 ஸ்டெலத் போர் விமானத்துடன் இணைந்து மேற்கொண்டதகாவும், B61-12 குண்டின் செயல்பாட்டு தயார்நிலை மற்றும் நிவியோக தளங்களின் பொருந்துதலை மதிப்பிடுவதில் இது முக்கியமான படியாகும் என தெரிவித்துள்ளது.
B61-12 குண்டு 1968 முதல் அமெரிக்கா மற்றும் NATO தளங்களில் பயன்படுத்தப்பட்ட B61 குண்டின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும்.
சமீபத்தில், பல ஆண்டு Life Extension Program (LEP) மூலம், இதன் சேவை ஆயுள் குறைந்தது 20 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகள், thermal preconditioning எனப்படும் புதிய பரிசோதனை முறையையும் உள்ளடக்கியது. இது, குண்டு உண்மையான சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் போது தேவையான சுற்றுச்சூழல் தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்தது.
அமெரிக்கா, 2026-க்குள் B61-12 குண்டின் முழுமையான உற்பத்தியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan