Paristamil Navigation Paristamil advert login

மெக்சிகோவில் ஆயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் போரட்டம்

 மெக்சிகோவில்  ஆயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் போரட்டம்

16 கார்த்திகை 2025 ஞாயிறு 12:04 | பார்வைகள் : 171


நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம், Gen Z என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில், நேபாள பிரதமர் பதவி விலக நேரிட்டது.

இதனை தொடர்ந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மொராக்கோ ஆகிய நாடுகளிலும் அரசுக்கு எதிராக Gen Z போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், வட அமெரிக்க நாடான மெக்சிகோவிலும் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக போராடி வந்த மிக்கோவாகன் மேயர் கார்லோஸ் மான்சோ கடந்த நவம்பர் 1ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து, ஆயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி பேரணி நடத்தியுள்ளனர்.

நாட்டில் குற்றங்கள், ஊழல்,தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் வசித்து வரும் தேசிய அரண்மனை முன் குவிந்த போராட்டக்காரர்கள், தடுப்புகளை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.

மேலும், காவல்துறையினர் மீது கற்களை வீசினர். இதனால் காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 100 காவலர்கள் உட்பட 120 பேர் காயமடைந்துள்ளனர். 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்