Paristamil Navigation Paristamil advert login

மக்ரோனின் இரண்டாவது பதவிக்காலம் "கப்பல் விபத்து" : மனுவல் வால்ஸ் விமர்சனம்

மக்ரோனின் இரண்டாவது பதவிக்காலம்

16 கார்த்திகை 2025 ஞாயிறு 16:08 | பார்வைகள் : 599


மனுவல் வால்ஸ் (Manuel Valls), முன்னாள் பிரஞ்சு பிரதமர், இம்மானுவேல் மக்ரோனின் இரண்டாவது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை "ஒரு கப்பல் கவிழ்ச்சி" என கடுமையாக விமர்சித்துள்ளார். 

ரேடியோ J-க்கு அளித்த பேட்டியில் அவர் பிரான்சில் "ஆட்சிக் குழு நெருக்கடி" உருவாகியுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார். 2022 இல் மக்ரோனின் மறுதேர்தல் "அதிசயமானது" என்றாலும், அது இரண்டாவது பதவிக்காலத்திற்கு எந்த அர்த்தமும் வழங்கவில்லை என அவர் கூறியுள்ளார். தேசிய சபை கலைப்பை ஒரு பெரிய தவறாகவும் அது ஜனநாயகத்திற்கு நிலைகுலைவை ஏற்படுத்தியதாகவும் அவர் கண்டித்துள்ளார்.

வெளிநாட்டு பிரதேசங்கள் அமைச்சகத்தில் இருந்து குறைந்தது ஒரு ஆண்டுக்குள் பதவி நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றி வால்ஸ் தனது "கோபத்தையும் அதிருப்தியையும்" வெளிப்படுத்தியுள்ளாரர். நியூ கலிடோனியாவில் தன்னால் பெற்ற வெற்றிகள் அல்லது பாலஸ்தீன அரசை அங்கீகரித்த பிரான்சின் செயல்முறையை அவர் விமர்சித்தது தனது நீக்கத்துக்கு காரணமாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Bougival ஒப்பந்தம் போன்ற தனது செயற்பாடுகள் அரசின் மேலிடம் விரும்பத்தக்கதாக இருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்