Paristamil Navigation Paristamil advert login

ஆப்கான் வான்வெளியில் அமெரிக்க ட்ரோன்கள் - தலிபான் அரசு குற்றச்சாட்டு

 ஆப்கான் வான்வெளியில்  அமெரிக்க ட்ரோன்கள் - தலிபான் அரசு குற்றச்சாட்டு

17 கார்த்திகை 2025 திங்கள் 05:54 | பார்வைகள் : 100


ஆப்கானிஸ்தான் வான்வெளியில் அத்துமீறி அமெரிக்க ட்ரோன்கள் பறந்து வருவதாக, தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அருகிலுள்ள நாடு ஒன்றின் வழியாக அமெரிக்க ட்ரோன்கள் நுழைந்து அனுமதியின்றி பறந்து வருவதாக, தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ஆப்கானிஸ்தான் வானில் அமெரிக்க ட்ரோன்கள் பறப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அமெரிக்கா ஆப்கான் வான்வழியை அத்துமீறி பயன்படுத்துகின்றது. என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எந்த நாட்டின் வழியாக அமெரிக்க ட்ரோன்கள் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் வருகின்றன என்பது குறித்து அவர் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை. ஆனால், ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் வானில் அமெரிக்க விமானம் அனுமதியின்றி பறப்பதற்கு பாகிஸ்தான் உதவியதாக, தலிபான் அரசு குற்றம்சாட்டியிருந்தது.

இத்துடன், ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க படைகள் மீண்டும் வருவதற்கு தலிபான் அரசு அனுமதிக்காது என்றும், அங்கு எந்தவொரு நாட்டின் இராணுவத் தளங்களும் அமைக்க அனுமதி இல்லை எனவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.     

வர்த்தக‌ விளம்பரங்கள்