எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம்: பூத் ஏஜன்டுகள் சமர்ப்பிக்க அனுமதி
17 கார்த்திகை 2025 திங்கள் 05:45 | பார்வைகள் : 137
வாக்காளர்களால் நிரப்பப்பட்ட, 50 கணக்கெடுப்பு படிவங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் ஏஜன்டுகள் பெற்று, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் சமர்பிக்கலாம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.
இந்த பணியை வெற்றி கரமாக செய்து முடிக்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளின் பங்கு இன்றியமையாதது.
அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் வரை, கணக்கெடுப்பு படிவங்களை, அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி ஏஜன்டுகள் பெற்று வழங்க, இந்திய தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி ஏஜன்டுகள், நாள்தோறும், 50 நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பெற்று, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம்.
அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும் போது, 'என் னால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும், என் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன்.
'தவறான தகவல்கள் அளிப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டனைக்கு உரியது என்பதை அறிவேன்' என்ற உறுதிமொழியும் அளிக்க வேண்டும்.
கட்சிகளின் ஏஜன்டுகளிடம் பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சரிபார்த்து, 'டிஜிட்டல்' வடிவமாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்காளர் பதிவு அலுவலர், அந்த படிவங்கள் மீது ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan