Paristamil Navigation Paristamil advert login

‘நூறு சாமி’ திரைப்படம் விரைவில் வெளியாகிறதா?

 ‘நூறு சாமி’ திரைப்படம் விரைவில் வெளியாகிறதா?

17 கார்த்திகை 2025 திங்கள் 09:45 | பார்வைகள் : 173


விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்’ கடந்த செப்டம்பரில் வெளியான நிலையில், தற்போது சசி இயக்கத்தில் உருவாகும் ‘நூறு சாமி’ தான் அவரது அடுத்த படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன், விஜய் ஆண்டனி ‘லாயர்’ என்ற படத்தில் நடித்துப் முடித்துள்ளார். ‘ஜென்டில் உமன்’ படத்தை இயக்கிய ஜோஸ்வா சேதுராமன் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். லாயர் படம் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் உள்ளது. ஏற்கெனவே, சுசீந்திரன் இயக்கிய விஜய் ஆண்டனி படமான ‘வள்ளிமயில்’, பைனான்ஸ் பிரச்னைகள் காரணமாக நீண்ட நாட்களாக வெளியீடு ஆகாமல் கிடப்பில் உள்ளது.

இந்நிலையில், ‘நூறு சாமி’ தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. ‘லாயர்’ படம் முன்பே தயாராகி இருந்தாலும், நூறு சாமி படம் வெளியான பிறகே அதை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் ‘நூறு சாமி’ முதலில் வெளியானால் அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும். அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘லாயர்’ படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்