Paristamil Navigation Paristamil advert login

தென்கிழக்கு காங்கோவின் பாலம் சரிந்து விழுந்து 32 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு காங்கோவின் பாலம் சரிந்து விழுந்து 32 பேர் உயிரிழப்பு

17 கார்த்திகை 2025 திங்கள் 15:28 | பார்வைகள் : 226


தென்கிழக்கு காங்கோவின் லுவாலாபா மாகாணத்தில் சுரங்கத்தின் பாலம் சரிந்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

மின்சார வாகனங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் - அயன் பேட்டரிகளில் முக்கிய அங்கமாக இருக்கும் கோபால்டை உலகளவில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ முன்னணியில் உள்ளது.

இந்த உற்பத்தியில், 90 சதவீதத்தை சீன நிறுவனங்கள் கட்டுப்படுத்துகிறது.

தென்கிழக்கு காங்கோவின் லுவாலாபா மாகாணத்தில் உள்ள கலண்டோ சுரங்கத் தளத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 15 ஆம் திகதி, அங்கே பாதுகாப்பிற்கு இருந்த ராணுவத்தினர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பீதியடைந்த தொழிலாளர்கள், சுரங்கத்தில் பாலம் ஒன்றின் வழியாக அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

ஓடிவந்த கூட்டத்தின் திடீர் அழுத்தம் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, பாலம் சரிந்துள்ளது. இதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்