Paristamil Navigation Paristamil advert login

கணணியில் தவறு! - இலவசமாக எரிபொருள் நிரப்பி நூதன கொள்ளை!!

கணணியில் தவறு! - இலவசமாக எரிபொருள் நிரப்பி நூதன கொள்ளை!!

17 கார்த்திகை 2025 திங்கள் 19:12 | பார்வைகள் : 641


பிரான்சில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு சென்று பலர் இலவசமாக எரிபொருள் நிரப்பியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுவிஸ் எரிபொருள் விற்பனை நிலையத்தின் கணணியில் உள்ள ஒரு பழுதை சாதகமாக பயன்படுத்தி, வாரத்துக்கு ஒருமுறை, தினமும், சில நாட்களில் நாள் ஒன்றுக்கு இரு தடவைகள் என எரிபொருளை நிரப்பி, பணம் செலுத்தாமல் சென்றுள்ளனர்.

சுவிசின் எல்லைப்புற நகரமான Bursin இல் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 5 மில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் சேதம் ஏற்பட்டதாகவும், மகிழுந்துகளின் இலக்கத்தகடுகள் ஆராயப்பட்டு, அவை பிரான்சுக்கு சொந்தமானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்