Paristamil Navigation Paristamil advert login

சமூக வீடுகளுக்கான சீர்திருத்தம் : அமைச்சரின் சர்ச்சைக்குரிய முன்மொழிவு!!

சமூக வீடுகளுக்கான சீர்திருத்தம் : அமைச்சரின் சர்ச்சைக்குரிய முன்மொழிவு!!

17 கார்த்திகை 2025 திங்கள் 20:50 | பார்வைகள் : 786


"நான் சொந்த வீடுகள் கொண்ட பிரான்ஸை விரும்புகிறேன்".நகராட்சி மற்றும் வீடமைப்பு அமைச்சர் வின்சன்ட் ஜோன்ப்ரூன் (Vincent Jeanbrun), சமூக வீடுகளை வாழ்நாள் முழுவதும் வழங்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக, நவம்பர் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு சமூக வீடுகளில் 8%-க்கும் குறைவான மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், இது மிகவும் குறைவு எனவும் அவர் கூறியுள்ளார். இதற்காக, குடும்பத்தின் நிலைமையையும் தொழில் மாற்றங்களையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கும் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் "3-6-9" முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் முன்மொழிந்துள்ளார். 

தற்போது 2.87 மில்லியன் குடும்பங்கள் சமூக வீடுகளுக்காக காத்திருக்கின்றன. ஆனால் HLM அமைப்புகளும் குடியிருப்பாளர் பாதுகாப்பு சங்கங்களும், பிரச்சனை என்பது ஒருவர் நீண்ட காலம் சமூக வீட்டில் தங்குவதா அல்ல, மாறாக வெளியேறும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதே எனக் கூறுகின்றன. 

வருமானம் உயர்ந்தால் கூடுதல் வாடகை அல்லது வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகும் தற்போதைய விதிமுறைகள் போதுமானதாக இல்லை என்றும், இந்த முன்மொழிவு சமூக வீடமைப்பின் உண்மையான தேவைகள் பொருத்தமற்றதாகப் பார்க்கப்படுகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்