இறுதி கட்டத்தில் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளைமாளிகை தகவல்
18 கார்த்திகை 2025 செவ்வாய் 14:52 | பார்வைகள் : 104
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே 5 கட்டங்களாக பேச்சு நடந்த நிலையில், இந்தியா மீது 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதையடுத்து, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவின் வரிவிதிப்பு செயலால் அதிருப்தியடைந்த இந்தியா, ஏற்றுமதிக்கான திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்தது. இது அதிபர் டிரம்ப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தக ஒப்பந்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். பின்னர் இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கியது.
இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், நாங்கள் நல்ல நண்பர்கள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், நிறைவடையும் தருவாயில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவுடனான் இந்தியாவின் தொடர்புகள் பேச்சுவார்த்தையில் சில சிக்கல்களை ஏற்படுத்தியது என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.
அதேபோல், ''இரு கட்டங்களாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில் பரஸ்பர வரி குறித்து பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளது. முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்'' என மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் இருந்து எல்.பி.ஜி., இறக்குமதி செய்ய முதல்முறையாக இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 22 லட்சம் டன் எல்.பி.ஜி., இறக்குமதி செய்ய நாட்டின் மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த எல்.பி.ஜி., இறக்குமதியில் 10 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan