Paristamil Navigation Paristamil advert login

2025ஆம் ஆண்டின் முடிவு எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடக்கலைஞரின் கணிப்பு

 2025ஆம் ஆண்டின் முடிவு எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடக்கலைஞரின் கணிப்பு

18 கார்த்திகை 2025 செவ்வாய் 13:14 | பார்வைகள் : 118


2025ஆம் ஆண்டு முடிவடையப்போகிறது. இந்நிலையில், பிரபல பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரான நாஸ்ட்ரடாமஸ் அது குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதை அறிய அவரைப் பின்பற்றுவோர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

2025ஆம் ஆண்டின் முடிவில், இங்கிலாந்தில் ஒரு போர் துவங்கும், பூமியை ஒரு விண்கல் தாக்கும், மேற்கத்திய நாடுகளின் தாக்கம் குறைந்து, ஒரு புதிய அரசு உலகில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கும் என்று கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.

நீண்ட காலமாக நடைபெற்றுவரும் ஒரு போர் முடிவடையும் என்று கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ். அது ரஷ்ய உக்ரைன் போராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

அதே நேரத்தில், இங்கிலாந்தில் ஒரு போர் துவங்கும் என்றும், ஒரு புதிய கொள்ளைநோய் உருவாகும் என்றும் கணித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.

பூமியை பெரிய விண்கல் ஒன்று தாக்கும் என்று கூறியுள்ள நாஸ்ட்ரடாமஸ், அதே நேரத்தில் பெரிய நாடுகளுக்குள் மோதல் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். அது அணு ஆயுதப் போராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், இதுவரை உலகில் ஆதிக்கம் செலுத்திவந்த மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் குறைந்து, புதிய அரசு உலகில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகளை இன்றைய சூழலுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பதில், அதாவது, விவரிப்பதில், கவனமாக இருக்கவேண்டும் என்கிறார், ஆவிகளுடன் பேசும் நிபுணரான ஜோஆன் ஜோன்ஸ் (Joanne Jones) என்பவர்.

ஆண்டு முடிவடையும் நேரத்தில் நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகளால் பதற்றமடையும் மக்கள் பலர் உண்டு என்று கூறும் அவர், நாஸ்ட்ரடாமஸ் எதையுமே நேரடியாக கூறுவதில்லை.

அவர் கவிதைகள் போல எழுதிவைத்துள்ளதிலிருந்து, இதுதான் அதன் பொருளாக இருக்கும் என்று அதற்கு விளக்கம் கூறுகிறார்கள் நிபுணர்கள், அவ்வளவே. ஆகவே, மக்கள் அது குறித்து பயந்துகொண்டே இருக்கவேண்டியதில்லை என்கிறார் ஜோன்ஸ்.

வர்த்தக‌ விளம்பரங்கள்