Paristamil Navigation Paristamil advert login

முஸ்தபா முஸ்தபா படம் மூலம் மீண்டும் காமெடி நடிகரான சதீஷ்

முஸ்தபா முஸ்தபா படம் மூலம் மீண்டும் காமெடி நடிகரான சதீஷ்

18 கார்த்திகை 2025 செவ்வாய் 14:18 | பார்வைகள் : 139


மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிக்கும் படம் 'முஸ்தபா முஸ்தபா'. பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்ததுள்ளார். கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். 'சட்டம் என் கையில், வித்தைக்காரன்' படங்கள் மூலம் ஆக்ஷனுக்கு திரும்பிய சதீஷ், மீண்டும் காமெடிக்கு திரும்பி உள்ள படம் இது.

படம் குறித்து இயக்குநர் பிரவீன் சரவணன் கூறும்போது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம். ஒரு எளிய பொய் எப்படி குழப்பமாக மாறுகிறது என்பதையும் சாதாரண மக்கள் பீதியடைந்து தங்கள் பிரச்னைகளை சரிசெய்ய போராடும்போது, அவை இன்னும் வேடிக்கையாகவும் குழப்பமாகவும் மாறும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் விவரிக்கும். சென்னை நகரத்தின் இயல்பு, அதன் நகைச்சுவை, பரபரப்பு மற்றும் இதயத் துடிப்பைப் படம்பிடித்து காட்டுகிறோம்" என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்