பூசணிக்காய் பூரி
18 கார்த்திகை 2025 செவ்வாய் 15:18 | பார்வைகள் : 128
ஆரோக்கியம் மற்றும் சுவையை விரும்புபவர்கள் ஊட்டச்சத்து நிரம்பிய பூசணிக்காய் பூரியை வீட்டில் செய்து சாப்பிடலாம். பூரி மாவுடன் பூசணிக்காயை சேர்ப்பதால் சுவையும் சத்துக்களும் கூடுகிறது.காலையில் பூரி சாப்பிட்டால் சிலருக்கு மந்தமாகவும் செரிமானம் ஆகாதது போன்று இருக்கும். பூசணிக்காய் சேர்த்த பூரியை சாப்பிட்டால் எந்த தொந்தரவும் வராது.
முக்கியமாக மைதாவில் பூரி செய்யாமல் கோதுமை மாவுடன் பூசணிக்காய் சேர்த்து செய்ய வேண்டும். பூசணிக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து. பூசணிக்காய் பூரிக்கு லேசான இனிப்பு சுவையைக் கொடுப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதற்கு தேவையான பொருட்களாக கோதுமை மாவு 1 கப், வேகவைத்து மசித்த பூசணிக்காய் – அரை கப், உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பூசணிக்காயின் தோலையும் விதைகளையும் நீக்கிவிட வேண்டும். அதை வேகவைத்து, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக மசித்து கூழாக்கி கொள்ள வேண்டும்.
கோதுமை மாவு, மசித்த பூசணிக்காய் கூழ், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் மட்டும் தெளிக்க வேண்டும். பின்னர் பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைய வேண்டும்.
மாவை சிறிய உருண்டைகளாக்கி, பூரி வடிவில் மிகவும் மெலிதாக இல்லாமல், சிறிது தடிமனாக உருட்ட வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரிகளை போட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும்.
இந்த பூசணிக்காய் பூரியை, உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து சாப்பிடலாம். இதில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால், காலை உணவிற்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவாக இருக்கும். இதனை சமைப்பதன் மூலம் உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan