Paristamil Navigation Paristamil advert login

ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா அன்பு, சேவைக்கான உலகத்திருவிழா: புட்டபர்த்தியில் மோடி பெருமிதம்

ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா அன்பு, சேவைக்கான உலகத்திருவிழா: புட்டபர்த்தியில் மோடி பெருமிதம்

19 கார்த்திகை 2025 புதன் 15:14 | பார்வைகள் : 108


சத்ய சாய்பாவின் நூற்றாண்டு விழா என்பது உலகளாவிய அமைதி, அன்பு மற்றும் சேவைக்கான திருவிழாவாக மாறி உள்ளது. ,'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக நுாற்றாண்டு நினைவு நாணயம் மற்றும் ஒரு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இந்த பிறந்தநாள் நூற்றாண்டு விழா வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, தெய்வீக ஆசீர்வாதம் ஆகும்.

புனித பூமி

சத்ய சாய்பாபா இப்பொழுது நம்முடன் இல்லை என்றாலும், அவரது போதனைகள் மற்றும் அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவை உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துகிறது. சத்ய சாய்பாபா மனித வாழ்க்கையில் சேவை என்பதை இதயத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புட்டபர்த்தியின் புனித பூமியில் இருப்பது ஒரு சிறந்த ஆன்மிக அனுபவம்.

பாக்கியம்

சாய்பாபாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தும் பாக்கியம் இன்று எனக்கு கிடைத்தது. சத்ய சாய்பாவின் நூற்றாண்டு விழா என்பது உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் சேவைக்கான திருவிழாவாக மாறி உள்ளது. ஏழை மக்களுக்கான நமது சமூக பாதுகாப்பு திட்டங்கள் சர்வதேச அரங்குகளில் போற்றப்படுகின்றன. உள்நாட்டு தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நாம் எட்ட முடியும்.

மகிழ்ச்சி

சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று கூடியிருக்கும் பலர் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் போதனைகளால் தங்கள் வாழ்க்கையை மாற்றியுள்ளனர். பாபாவின் உத்வேகத்துடன், ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மற்றும் அதன் துணை அமைப்புகள் புனிதமான பணியை தொடர்கின்றன என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சத்ய சாய் பாபாவை கவுரவிக்கும் வகையில் ரூ.100 சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட்டது நமது அரசிற்கு ஒரு மரியாதை. இந்த சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பாபா சேவகர்கள் சேவை பாராட்டுதலுக்கு உரியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்