ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முடக்கம்
19 கார்த்திகை 2025 புதன் 10:58 | பார்வைகள் : 289
ஜனாதிபதி ட்ரம்பால் தடை விதிக்கப்பட்ட Rosneft எண்ணெய் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலை ஒன்று உக்ரைன் ட்ரோன் தாக்குதலை அடுத்து மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று Ryazan. இதன் மீதே நவம்பர் 15ம் திகதி உக்ரைன் இராணுவம் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதுடன், இந்த மாதம் கடைசி வரையில், Ryazan ஆலை செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, டிசம்பர் 1ம் திகதிக்கு முன்னர் எண்ணெய்ப் பொருட்களை லொறிகளில் ஏற்றும் திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனிடையே, Ryazan பகுதி ஆளுநர் தெரிவிக்கையில், ட்ரோன் தாக்குதல் காரணமாக சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் தீ எரிவதாகவும், ஆனால், அது Ryazan சுத்திகரிப்பு ஆலையா என்பதை அவர் உறுதி செய்யவில்லை.
சமீபத்தின மாதங்களில் உக்ரைன் இராணுவம் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கிடங்குகள் மற்றும் குழாய்கள் மீது தீவிர ட்ரோன் தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை மட்டும் ரஷ்யாவின் முதன்மையான எண்ணெய் சுத்திகரிப்பு அலைகளில் குறைந்தது 17 ஆலைகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு என்பது வெறும் 3 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது,
ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்தை ஈடுசெய்ய உபரி கொள்ளளவைப் பயன்படுத்துவதன் மூலம் சுத்திகரிப்பு ஆலைகள் எரிபொருள் உற்பத்தியில் ஏற்பட்ட கடுமையான சரிவைத் தவிர்த்தன.
இதனிடையே, தீ விபத்து ரியாசான் சுத்திகரிப்பு நிலையத்தை அதன் முக்கிய கச்சா எண்ணெய் வடிகட்டுதல் அலகை மூடும் நிலைக்கு தள்ளியதாக தகவல் கசிந்துள்ளது. இது ஆண்டுக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உற்பத்தித் திறனைக் கொண்டதாகும்.
அதாவது ஆலையின் மொத்த உற்பத்தித் திறனில் 48 சதவீதத்திற்கு சமம் என்றே கூறுகின்றனர். அக்டோபர் 24 ஆம் திகதி ரஷ்யாவின் இன்னொரு கச்சா எண்ணெய் வடிகட்டும் ஆலையும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானது.
இதனால் சுத்திகரிப்பு நிலையத்தின் 26 சதவீத கொள்ளளவு நீக்கப்பட்டது. அந்த அலகின் பழுதுபார்ப்பு இன்னும் முடிக்கப்படவில்லை, மேலும் ஆலையின் மீதமுள்ள அலகுகளும் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது.
Ryazan சுத்திகரிப்பு ஆலையானது 2024ல் மட்டும் 13.1 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சுத்திகரித்துள்ளது. ரஷ்யாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பில் இது 4.9 சதவீதம்.
Ryazan சுத்திகரிப்பு ஆலையில் 2.2 மில்லியன் டன் பெட்ரோல், 3.4 மில்லியன் டன் டீசல் மற்றும் 4.3 மில்லியன் டன் எரிபொருள் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan