Paristamil Navigation Paristamil advert login

பாபர் அஸாம் டக்அவுட்- ஜிம்பாப்வேயை போராடிய வீழ்த்திய பாகிஸ்தான்

 பாபர் அஸாம் டக்அவுட்- ஜிம்பாப்வேயை போராடிய வீழ்த்திய பாகிஸ்தான்

19 கார்த்திகை 2025 புதன் 10:58 | பார்வைகள் : 446


முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

ராவல்பிண்டியில் நேற்று நடந்த முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. பிரையன் பென்னெட் 36 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் விளாசினார்.

மருமாணி 22 பந்துகளில் 30 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 3 பவுண்டரிகள்), அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா 24 பந்துகளில் 34 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பர்ஹான் 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாபர் அஸாம் டக்அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அணித்தலைவர் சல்மான் ஆகா 1 ரன்னில் lbw ஆக, பாகிஸ்தான் அணி தடுமாறியது. சைம் அயூப் 22 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

எனினும் ஃபஹர் ஜமான் (Fakhar Zaman) அதிரடியாக 44 ஓட்டங்கள் (2 sixer, 2 பவுண்டரிகள்) விளாசினார். பின்னர் உஸ்மான் கான் மற்றும் மொஹம்மது நவாஸ் கூட்டணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதன்மூலம் பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

உஸ்மான் கான் (Usman Khan) 28 பந்துகளில் 37 ஓட்டங்களும், மொஹம்மது நவாஸ் (Mohammad Nawaz) 12 பந்துகளில் 21 ஓட்டங்களும் விளாசினர். நாளை நடைபெற உள்ள போட்டியில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. 

வர்த்தக‌ விளம்பரங்கள்