Paristamil Navigation Paristamil advert login

முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் பேஸ் வா‌‌ஷ்

முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் பேஸ் வா‌‌ஷ்

11 கார்த்திகை 2019 திங்கள் 16:44 | பார்வைகள் : 8921


 முகத்தில் உள்ள சருமத்தின் தன்மையும், மற்ற பாகங்களின் சருமத்தின் தன்மையும் வேறு வேறாக இருக்கும். முகத்தின் சருமம், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்தைவிட மென்மையானது. உடம்புக்கு உபயோகிக்கிற அதே சோப்பையே முகத்துக்கும் பயன்படுத்துவதால் முகத்தின் சருமம் வறண்டு போகும். அதனால் தான் முகத்துக்கு ‘பேஸ் வா‌‌ஷ்’ உபயோகிக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 
இதில் அவரவர் முகத்தின் தன்மைக்கு ஏற்ப பேஸ் வா‌‌ஷ் சந்தைகளில் கிடைக்கிறது. எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்களுக்கு ‘ஆயில் ப்ரீ பேஸ் வா‌‌ஷ்’ நல்லது. பருக்கள் இருப்பவர்களுக்கு ‘சாலிசிலிக் ஆசிட்’ உள்ள பேஸ் வா‌‌ஷ் நல்ல நிவாரணம் அளிக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பால், க்ரீம் கலந்த பேஸ் வா‌‌ஷ், காம்பினே‌‌ஷன் சருமம் உள்ளவர்களுக்கு டி ஸோன் பகுதியை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக பேஸ் வா‌‌ஷ்.
 
 
சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு பாரபின் மற்றும் வாசனை சேர்க்காத பேஸ் வா‌‌ஷ். முதுமையைத் தள்ளிப்போடவும், சுருக்கங்களை தவிர்க்கவும் ஆன்ட்டி ஏஜிங் பேஸ் வா‌‌ஷ், சரும நிறத்தை மேம்படுத்த ஸ்கின் லைட்டனிங் பேஸ் வா‌‌ஷ் என்று ஏராளமான பேஸ் வா‌‌ஷ் வந்துவிட்டன. பேஸ் வா‌‌ஷ் உபயோகிப்பதற்கும் முறைகள் உண்டு. முதலில் முகத்தை ஈரப்படுத்திவிட்டு, பேஸ் வா‌ஷில் சிறு துளியை எடுத்து முகத்தில் தடவி, மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்து, கழுவ வேண்டும்.
 
பேஸ் வா‌‌ஷ் உபயோகிக்கும் போது சருமத்தில் லேசான பிசுபிசுப்புத்தன்மை இருக்கும். அது பற்றி கவலை வேண்டாம். வெளியில் சென்று விட்டு வந்த உடனேயும், இரவில் படுக்க செல்வதற்கு முன்பும் பேஸ் வா‌‌ஷ் உபயோகித்து முகத்தைச் சுத்தப்படுத்த வேண்டியது மிக அவசியம். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஒவ்வாமை இருப்பவர்கள் வாசனையோ, அதிக நுரையோ, சோடியம் லாரைல் சல்பேட் போன்ற ரசாயனம் கலந்த பேஸ் வா‌‌ஷ்களை தவிர்க்கவும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்