சரும வறட்சியை போக்கும் நெய்
21 ஐப்பசி 2019 திங்கள் 12:37 | பார்வைகள் : 14041
நெய் ஆரோக்கியமான மற்றும் எடை அதிகரிப்பதற்கு உதவுகின்றது. நெய் மென்மையான மற்றும் ஆரோக்கியமான தோலை பெற பயன்படுத்தப்படுகிறது.
* நெய் சரும வறட்சியை தடுத்து புத்துணர்ச்சியை அளிக்கின்றது. சிறிதளவு நெய்யை சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். விரைவில் சருமம் உலர்வதை தடுத்து எதிர்காலத்தில் சரும வறட்சியை தடுக்க பாதுகாப்பான மருந்தாகும்
* உங்களுக்கு எண்ணெய் குளியல் பிடிக்குமா? அப்போ நெய்யை பயன்படுத்தவும். நெய் எண்ணெய் குளியலுக்கு ஏற்ற பயனுள்ள பொருள். 5 மேசைக்கரண்டி நெய் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் 10 துளிகள் சேர்த்து உடலில் தடவி குளித்தால் மிகவும் மென்மையான தோலை பெறலாம்.
* உங்கள் கண்கள் சோர்வடைவதால் களைப்படைவதால் பாதிக்கப்படுகின்றவரா நீங்கள் சிறிது நெய்யை எடுத்து கண்களை சுற்றி பூசுங்கள். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கண்கள் சோர்வடைவது குறையும்.
* நெய் உலர்ந்த உதடுகளை தடுத்து பளபளப்பான மற்றும் இளஞ்சிவப்பு உதடுகளை அளிக்கின்றது. அதற்கு தினமும் படுக்க போவதற்கு முன்னால் சிறிதளவு நெய்யை உதட்டில் தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.





திருமண பொருத்தம்
இன்றைய ராசி பலன்

















Bons Plans
Annuaire
Scan