பெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும்- தீர்க்கும் வழிமுறையும்
30 புரட்டாசி 2019 திங்கள் 16:17 | பார்வைகள் : 9064
உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும். பெண்களின் உடலில், பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களுக்கான ஆன்ட்ரோஜன் ஆகிய இரண்டு ஹார்மோன்களுமே இருக்கும். வயது அதிகரிக்கும் போது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு ஆண்களுக்கான ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதாலும், சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடிகள் தோன்றுவதுண்டு.
முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க :
* மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.
* சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 10 -15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.
* முகத்தில் தோன்றும் முடிகளை நீக்க: ஹேர் ரிமூவிங் கிரீம், வாக்சிங், ப்ளீச்சிங், எலக்ட்ரோலிசிஸ், லேசர் சிகிச்சை போன்ற மருத்துவ முறையும் மேற்கொள்ளலாம்.
* நெட்டில் இலையை நீரில் கழுவி நன்கு அரைத்து மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் மீது தடவி இரண்டு மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும். இந்த முறையை தினமும் என 4-6 வாரம் தொடர்ந்து செய்து வர பலன் அதிகம்.