Paristamil Navigation Paristamil advert login

தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

25 புரட்டாசி 2019 புதன் 10:44 | பார்வைகள் : 9172


 பொதுவாக பெண்கள் சிலருக்கு பின்பக்க சதைகள் போட்டு அசிங்கமாக காணப்படுவதுண்டு. இதற்காக கடினமான பயிற்சிகளை தான் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சியை செய்தாலே போதும்.

 
பயிற்சி
 
 
முதலில் விரிப்பில் நேராக நின்று, நடப்பது போல ஒரு காலை முன்பக்கமாவும் மற்றொரு காலை பின்பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
 
இப்போது முன்பக்க காலை மடித்து நிற்பது போல் வைத்துக் கொண்டு, பின்பக்க கால் முட்டியை தரையை நோக்கி (ஆனால் தரையில் படக்கூடாது) கொண்டு வர வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
 
இது போல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதே போல இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும்.
 
பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். தினமும் வீட்டில் இருந்தபடியே 20 நிமிடம் பயிற்சி செய்தால் போதுமானது. இந்த வீட்டில் இருந்தபடியே செய்யலாம். மேலும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
 
பயன்கள்
 
முன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஃபிட்டாக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்