சிறை செல்வதற்கு முன்பாக சார்கோசியை சந்தித்த மக்ரோன்!!

20 ஐப்பசி 2025 திங்கள் 21:01 | பார்வைகள் : 961
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், முன்னாள் குடியரசுத் தலைவர் நிக்கோலா சர்கோசியை அக்டோபர் 17, வெள்ளிக்கிழமை அன்று எலிசே மாளிகையில் இரகசியமாக சந்தித்துள்ளார். இது சார்கோசி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) பைரிஸ் நகரிலுள்ள 'லா சாண்டே' சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்றுள்ளது. மக்ரோன் இதை "மனிதாபிமான ரீதியில் இயல்பானது" என்று கூறியுள்ளார்.
2007 தேர்தலில் லிபிய நிதி வழக்கில் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி மேல்முறையீடு செய்துள்ளார். நீதியமைச்சர் ஜெரால்ட் டர்மனின், சர்கோசியை சிறையில் பார்ப்பதாகவும், அவரது பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் இன்னும் குற்றமற்றவர் என கருதப்படுகிறார் என்றும் கூறியுள்ளார்.
சார்கோசியின் மகன்கள் செவ்வாய்க்கிழமை காலை அவர் சிறைக்கு செல்லும் போது பொதுமக்களை ஆதரவு பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சூழ்நிலைக்கு அவர் மனிதநேயக் கோணத்தில் மிகுந்த வருத்தம் தெரிவிப்பதாக நீதியமைச்சர் கூறியுள்ளார்.