அவநம்பிக்கை : மக்ரோன் மிக குறைந்த அளவு செல்வாக்கில்..!!!

21 ஐப்பசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 915
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதுவரை இல்லாத அளவு மிகக்குறைந்த செல்வாக்கு வீழ்ச்சியினை சந்தித்துள்ளார்.
இம்மானுவல் மக்ரோன் தற்போது 22% சதவீத பிரபலத்தன்மையுடன் உள்ளார். பிரெஞ்சு ஜனாதிபதிகளில் இதுவரை எந்த ஒரு ஜனாதிபதியும் பெற்றுக்கொள்ளாத மிக குறைந்த வீழ்ச்சி இதுவாகும். மக்ரோன் 2017 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஜனாதிபதியாக தெரிவாகும் போது அவர் 44% சதவீத பிரபலத்தன்மையை பெற்றிருந்தார்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடந்த சில மாதங்களாக பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்தை வைத்துக்கொண்டு அவர், வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறார். இதுவரை மூன்று பிரதமர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் மக்ரோனின் செல்வாக்கு கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்துக்கணிப்பை Ipsos நிறுவனம் மேற்கொண்டு, நேற்று ஒக்டோபர் 20 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.