Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் புறநகரை தாக்கிய சூறாவளி : ஒருவர் பலி.. ஒன்பது பேர் காயம்! - மின் தடை!!

பரிஸ் புறநகரை தாக்கிய சூறாவளி : ஒருவர் பலி.. ஒன்பது பேர் காயம்! - மின் தடை!!

21 ஐப்பசி 2025 செவ்வாய் 08:38 | பார்வைகள் : 913


Val-d'Oise மாவட்டத்தை பெரும் சூறாவளி ஒன்று தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

ஒக்டோபர் 20, நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சூறாவளி Val-d'Oise மாவட்டத்தை தாக்கியிருந்தது. இதில் Ermont  நகரில் 23 வயதுடைய பாரம்தூக்கி (கிரேன்) இயக்குநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் காயமடைந்தனர். சூறாவளியில் சிக்கி கிரேன் சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு மற்றுமொரு கிரேன் சரிந்து விழுந்ததில் ஐவர் காயமடைந்தனர்.

மூன்றாவதாக மற்றுமொரு கிரேனும் சரிந்ததாகவும், அதிஷ்ட்டவசமாக அதில் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சூறாவளியில் பல்வேறு இடங்களில் மரம் முறிந்து விழுந்தது. போக்குவரத்து நாள் முழுவதும் தடைப்பட்டது. 324 மீட்புப்பணிகள் இடம்பெற்றன. இரவு முழுவதும் 1,700 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளன.

RER C மற்றும்  H வழிச் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததன

வர்த்தக‌ விளம்பரங்கள்