Paristamil Navigation Paristamil advert login

‘சூர்யா 46’ படத்தில் பிரபல நடிகரின் மகன்?

‘சூர்யா 46’ படத்தில்  பிரபல நடிகரின் மகன்?

21 ஐப்பசி 2025 செவ்வாய் 11:26 | பார்வைகள் : 213


சூர்யா நடிப்பில் கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. மேலும் ஜித்து மாதவன், பா. ரஞ்சித் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய 47வது மற்றும் 48வது படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதற்கிடையில் இவர், வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இதில் மமிதா பைஜு, ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் மகன் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்