Paristamil Navigation Paristamil advert login

வகுப்பறையில் மாணவியைக் கொன்ற ஆசிரியைக்கு தென் கொரிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

வகுப்பறையில் மாணவியைக் கொன்ற ஆசிரியைக்கு தென் கொரிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

21 ஐப்பசி 2025 செவ்வாய் 12:11 | பார்வைகள் : 248


தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த வழக்கில், ஆசிரியையான மையாங் ஜே வான் (Myang Jae Wan) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தென் கொரியாவை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக 8 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டேஜியானைச் சேர்ந்த மையாங் ஜே வான் (வயது 48) என்ற ஆசிரியை, கடந்த பெப்ரவரி மாதம் வகுப்பறையில் வைத்து 8 வயது சிறுமியைக் கொலை செய்தார்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலில் பல கத்திக்குத்துக் காயங்கள் இருந்துள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை மையாங் ஜே வான், தனது வாக்குமூலத்தில், கத்தியுடன் பாடசாலைக்கு வந்த சிறுமி ஏனைய  மாணவர்களைத் தாக்க முயன்றதாகவும், தான் அவளைத் தடுத்தபோது சிறுமி தன்னைக் கத்தியால் குத்தியதாகவும், அதனால் தான் திருப்பித் தாக்க நேரிட்டதாகவும் வாதிட்டார்.

இந்த வழக்கு டேஜியான் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியான ஆசிரியை மையாங் ஜே வானுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், தண்டனைக் காலம் முழுவதும் அவர் கண்காணிக்கப்படுவதற்காக, 30 ஆண்டுகளுக்கு அவரது கையில் பொலிசாரால் வழங்கப்படும் மின்னணுக் கண்காணிப்புக் கருவியை (Electronic Monitoring Device) பொருத்தி இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தென் கொரியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நீதி விரைவாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்