மீண்டும் விஜயின் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம்...எப்போது தெரியுமா?

22 ஐப்பசி 2025 புதன் 05:16 | பார்வைகள் : 167
இயக்குநர் சித்திக் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ப்ரண்ட்ஸ்’. இந்தப் படத்தில் சூர்யா, தேவயானி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, மதன்பாபு, ராதா ரவி, சார்லி, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்தார்.காமெடி, நட்பு, செண்டிமென்ட் என கமர்ஷியல் திரைப்படமாக உருவான இந்த படம், 2001 ஆம் ஆண்டு வெளியாக பெரும் வரவேற்பைப் பெற்று வணிகரீதியாகவும் வெற்றிப்படமானது. நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வடிவேலு. அவரின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் பலரும் கவலை மறந்து சிரிக்க வைத்து வருகிறது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தை 4கே தரத்தில் தொழில்நுட்ப மேம்பாடு செய்து வருகிற நவம்பர் 21 ஆம் தேதி மீண்டும் திரைக்குக் கொண்டு வருவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விஜயின், ‘கில்லி’, ‘சச்சின்’ ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றன. தற்போது இந்தப் படங்களின் வரிசையில் ‘ப்ரண்ட்ஸ்’ படமும் இணைந்திருக்கிறது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.