Google Chrome-க்கு சவாலாக OpenAI ChatGPT Atlas அறிமுகம்

22 ஐப்பசி 2025 புதன் 18:59 | பார்வைகள் : 437
OpenAI நிறுவனம் தனது புதிய AI-செயல்படுத்தப்பட்ட இணைய உலாவியாக ChatGPT Atlas-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது Google Chrome-ஐ நேரடியாக போட்டியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது Atlas macOS-இல் கிடைக்கிறது, Windows, iOS மற்றும் Android பதிப்புகள் விரைவில் வரவிருக்கின்றன.
OpenAI CEO சாம் ஆல்ட்மன், “AI தொழில்நுட்பம் உலாவிகளைப் பற்றிய பார்வையை மாற்றும் வாய்ப்பு” எனக் கூறினார்.
Atlas உலாவியில் URL-ஐ டைப் செய்வதற்குப் பதிலாக, பயனர்கள் ChatGPT-யுடன் உரையாடி தகவல்களை தேடலாம்.
இந்த உலாவி, பயனர்களின் பழைய உலாவி தரவுகளை இறக்குமதி செய்து, தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.
Atlas-இன் முக்கிய அம்சம், எந்த இணையதளத்திலும் ChatGPT-யுடன் உரையாடும் வசதி. இது பயனர்களின் தேடல்களை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையான பதில்களை வழங்கும்.
மேலும், Atlas-இல் உள்ள “Agent Mode” மூலம், பயனர்கள் ChatGPT-யை நேரடியாக பணிகளைச் செய்ய வைக்கலாம். உதாரணமாக, சமையல் குறிப்பை பார்த்தபோது, Grocery List உருவாக்கி, வாங்கும் செயல்பாட்டைத் தொடங்கலாம்.
இது Chrome, Safari போன்ற உலாவிகளுடன் ஒத்த அம்சங்களை கொண்டிருந்தாலும், AI-யை மையமாகக் கொண்டு புதிய அனுபவத்தை வழங்குகிறது.
Atlas தற்போது Business, Plus மற்றும் Pro பயனர்களுக்கே Agent Mode-ஐ வழங்குகிறது.
AI உலாவி போர் தொடங்கியுள்ள நிலையில், Atlas OpenAI-யின் முதல் முயற்சி. இது இணைய உலாவி உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.