Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் அதிரடி நீக்கம் - பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணங்கள்

பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் அதிரடி நீக்கம் - பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணங்கள்

23 ஐப்பசி 2025 வியாழன் 07:53 | பார்வைகள் : 119


பாகிஸ்தான் ODI கேப்டன் பொறுப்பில் ரிஸ்வான்நீக்கப்பதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் ஒருநாள்(ODI) கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக செயல்பட்டவர் முஹமது ரிஸ்வான்(Mohammad Rizwan).

தற்போது அவர் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, ஒருநாள் அணியின் அணித்தலைவராக ஷாகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பரில் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷாகீன் அப்ரிடி அணித்தலைவராக செயல்படுவார்.

அணி தேர்வாளர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக அறிவிக்காததால் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளது.

அவர் சூதாட்ட நிறுவனங்களை ஆதரிக்க மறுத்ததால் அவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தனது மத நம்பிக்கைக்கு விரோதமாக சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்ற முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அவர் உறுதியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற CPL தொடரில், சூதாட்ட நிறுவனத்தின் லோகோவை தனது உடையில் அணிய மறுத்து விட்டார்.

ஆனால் அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசியதே அணித்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார்.

அவர் வீரர்களிடம் ஒருநாளைக்கு 5 முறை தொழுகையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியது, வீரர்களிடையே அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்