Paristamil Navigation Paristamil advert login

4500 ஆண்டுகால பிரமிடு ரகசியத்தை உடைத்த ஆய்வாளர்கள்

4500 ஆண்டுகால பிரமிடு ரகசியத்தை உடைத்த ஆய்வாளர்கள்

23 ஐப்பசி 2025 வியாழன் 07:53 | பார்வைகள் : 124


எகிப்திய பிரமிடு குறித்த ஆயிரக்கணக்கான ஆண்டு ரகசியத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலக அதிசயங்களில் எகிப்தின் பிரமிடுகள் குறித்த ஆர்வம் பலருக்கும் உண்டு. அதற்கு காரணம் அதன் கட்டிட பின்னணி குறித்த ரகசியம்தான்.

ஏனெனில், தொழில்நுட்பங்கள் இல்லாத அக்காலத்தில் எப்படி டன் கணக்கான கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தார்கள் என்ற கேள்வி இன்னமும் நிலவி வருகிறது.

ஆனால் ஏலியன்கள் கட்டியதுதான் இந்த பிரமிடுகள் என்றும், லட்சக்கணக்கான அடிமைகளை வைத்து கட்டப்பட்டவைதான் இவை என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வுகள் இந்த அனைத்தையும் கதை என்று நிரூபிக்கும் வகையில் ரகசியத்தை உடைத்துள்ளது.

குறிப்பாக கிசா பிரமிடு பற்றிய உண்மையை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அதாவது, சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு 'கூஃபு' என்ற ஒரு எகிப்திய மன்னனுக்காக கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கல்லறைதான் இந்த கிசா பிரமிடு என தெரிய வந்துள்ளது.

இந்த பிரமிடு 140 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்டது. இதனை கட்டி முடிக்க சுமார் 23 லட்சம் பாரிய கற்களைப் பயன்படுத்தியதும், ஒவ்வொரு கல்லும் பல டன்கள் எடை கொண்டவை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் எகிப்திய தொழிலாளர்கள் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு திறமையான வேலையை செய்து இவற்றை கட்டியதாகவும், அடிமைகளைக் கொண்டு கட்டப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொழிலார்கள் வாழ்ந்த ஒரு பாரிய நகரத்தையே தொல்பொருள் ஆய்வாளர்கள் தோண்டி எடுத்து இதனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்