இலத்திரனியல் சிகரெட் : இணைத்தில் விற்பனை செய்ய தடை!!

23 ஐப்பசி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 499
இலத்திரனியல் சிகரெட் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. அதில் ஒன்றாக இணையம் வழியாக ‘ஒன்லைனில்’ விற்பனை செய்ய தடை கொண்டுவரப்பட உள்ளது.
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் இருந்த ” produits de vapotage” எனும் இலத்திரனியல் சிகரெட்களுக்கு வரி அதிகரிப்பு இடம்பெற உள்ளது. அத்தோடு அது ஒரு ‘புகையிலை’ பொருளாகவும் கருதப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது புகையிலை பொருள் என கருதப்படுவதால், சிகரெட் பெட்டிகள் மீது விதிக்கப்பட்டுள்ள அத்தனை கட்டுப்பாடுகளும் இதற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு இணையம் வழியாக வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட உள்ளது. வயது வரம்பை கருத்தில் கொண்டு சிறுவர்கள் அதனை பயன்படுத்துவதை தடுக்கும் முகமாக இந்த சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
திரவங்களை உள்ளடக்கிய e-liquides பொருட்களுக்கும், இலத்திரனியல் சிகரெட்களுக்கும் (cigarettes électroniques) இது பொருந்தும். (சட்டவரைவு 23 - நிதியியல் மசோதா) அதேவேளை, இந்த சட்டமாற்றத்தை கைவிடுமாறு பல்வேறு தரப்பில் இருந்து கையெழுத்து மனுக்கள் இணையம் வழியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Le Petit Vapoteur, Class'Clope, Vapostore, Clopinette போன்ற பொருட்கள் கடைகளில் அதிகளவில் விற்பனையாகிறமை குறிப்பிடத்தக்கது.