நேரமாற்றம்!!
24 ஐப்பசி 2025 வெள்ளி 11:40 | பார்வைகள் : 804
பிரான்ஸ் இந்த வார இறுதியில் குளிர்கால நேரத்துக்கு மாறுகிறது.
ஒக்டோபர் 25-26 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் ஒருமணிநேரம் நேரம் குறைக்கப்படுகிறது. அதிகாலை 3 மணி 2 மணியாக மாற்றம் பெறுகிறது. இதனால் ஒருமணிநேர மேலதிக தூக்கத்தை பிரெஞ்சு மக்கள் அனுபவிக்கமுடியும்.
தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களில் தானியங்கி முறையில் நேரமாற்றம் மாறுதலுக்கு உள்ளாகும் எனவும், 'அனலொக்' கடிகாரங்களில் மக்கள் நேரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரமாற்றம் Saint-Pierre-et-Miquelon தவிர்ந்த ஏனைய கடல்கடந்த நிர்வாக மாவட்டங்களில் ஏற்படாது.
பிரான்சில் 1976 ஆம் ஆண்டில் இருந்து இந்த நேரமாற்றம் இடம்பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan