Paristamil Navigation Paristamil advert login

அசோக் செல்வனின் புதிய பட தலைப்பு இதுவா ?

அசோக் செல்வனின் புதிய பட தலைப்பு இதுவா ?

24 ஐப்பசி 2025 வெள்ளி 14:29 | பார்வைகள் : 216


நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே, போர் தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் ஆகிய வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது தவிர இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அசோக் செல்வன், மீண்டும் ‘போர் தொழில்’ பட இயக்குனருடன் கைகோர்த்துள்ளார்.அசோக் செல்வனின் புதிய பட டைட்டில் இதுதானா?அதாவது போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் கதையில் கார்த்திக் ராமகிருஷ்ணன் இயக்கி வரும் புதிய படத்தில் நடிக்கிறார்.

அசோக் செல்வனின் 23வது படமான இந்த படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருவது போல் தெரிகிறது. அதன்படி ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் மூணாறு போன்ற பகுதிகளில் நடைபெற்று கிட்டத்தட்ட நிறைவு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது

சமீபத்தில் தீபாவளி தின ஸ்பெஷலாக இந்த படத்தில் இருந்து ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி இந்த படத்திற்கு Promise என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்