இலங்கையில் தேங்காய் திருடியவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி
24 ஐப்பசி 2025 வெள்ளி 18:54 | பார்வைகள் : 170
இலங்கையில் தேங்காய் திருட்டினால் ஏற்பட்ட முறுகல் காரணமாக கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு 30ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரைணயின் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு தேங்காய்களை திருடியமைக்காக தேங்காய் உரிக்கும் இரும்புக் கருவியால் அடித்துக் கொலை செய்த குற்றவாளிக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க மரண தண்டனை விதித்தார்.
சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் மீதான நீண்ட விசாரணைக்கு பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கில் முதல் குற்றவாளியான ரஞ்சித் தர்மசேனவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் இறக்கும் வரை வெலிக்கடை சிறையில் தூக்கிலிட உத்தரவிடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
திடீர் கோபம் அல்லது இயற்கைக்கு மாறான சூழ்நிலைகளால் மரணம் ஏற்படவில்லை என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.


























Bons Plans
Annuaire
Scan