ஐசிசி மீது அதிருப்தி..வேதனை தெரிவித்த பாகிஸ்தான் கேப்டன்
25 ஐப்பசி 2025 சனி 08:42 | பார்வைகள் : 119
ஐசிசி கண்டிப்பாக நல்ல சூழ்நிலையில் அமைந்துள்ள மைதானங்களை தெரிவு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மகளிர் அணித்தலைவர் பாத்திமா சனா தெரிவித்தார்.
நேற்று நடைபெற இருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
தாமதமாக தொடங்கிய போட்டி 34 ஓவர்களாக குறைப்பட்டு, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4.2 ஓவர்களில் 18 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ஆனால் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று திரும்பலாம் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு இது பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணித்தலைவர் பாத்திமா சனா, "சமீப காலங்களில் நாங்கள் அதிக கிரிக்கெட் விளையாடவில்லை. ஒரு தொடருக்குப் பிறகு நாங்கள் தகுதி பெற்றோம். எனவே, உலகக்கிண்ணத்திற்கு பிறகு எங்களுக்கு நிச்சயமாக இன்னும் நிறைய கிரிக்கெட் தேவை என்று நான் நினைக்கிறேன்.
ஐசிசி கண்டிப்பாக நல்ல மைதானங்களை (சூழ்நிலையில்) உலகக்கிண்ணத்திற்கு என தயார் செய்ய வேண்டும். ஏனெனில் நாங்கள் நான்கு ஆண்டுகள் காத்திருந்து விளையாட வருகிறோம்" என தெரிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan