கந்தனுக்கு பிடித்த நெய்வேத்தியம் கந்தரப்பம்... ...
25 ஐப்பசி 2025 சனி 16:56 | பார்வைகள் : 126
கந்த சஷ்டி விழா நாட்களில் தென் மாவட்டடதில் வீட்டின் சமையல் அறைகளில் இனிய மனம் வீசுவது “கந்தரப்பம்” ஆகும். இந்த கந்தரப்பம் முருகனுக்கு சமர்ப்பிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு வகை ஆகும். இன்றும் தென் மாவட்டங்களில் கந்தஷ்டி தினத்தில் முக்கிய இடம் பிடிக்கும் இந்த கந்தரப்பம் எளிதாக செய்வது எப்படி என பார்க்கலாம்...
அந்த காலத்தில் சுண்டலுக்கும், தேங்காய்ப்பாலுக்கும் அடுத்தபடியாக கந்தரப்பம் செய்து கந்தனுக்கு படைத்து வந்தனர். பச்சரிசி, உளுந்து , பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை நன்கு ஊறவைத்து, அரைத்து, அதில் கருப்பட்டி அல்லது வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய், சிறிது வாழைப்பழம் சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும். இதன் பிசைவு மிக அருமையாக இருந்தால் தான் கந்தரப்பம் மொறுமுறுப்பாகவும் மென்மையாகவும் வரும்.
பின்பு கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கி, அந்த கலவையை சிறிய உருண்டைகளாக ஊற்ற வேண்டும். பொன்னிறமாக வெந்த உடன் அதை எடுக்க வேண்டும். வெளியே லேசான பொன்னிறமும், உள்ளே மிருவாகவும் இருக்கும் அந்த இனிப்பு மணம் வீட்டை முழுவதும் நிரப்பி விடும்.
கந்த சஷ்டி நாட்களில் முருகனுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் கந்தரப்பம், உணவாக மட்டுமல்லாது பக்தியின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. இது சுவை மட்டும் இல்ல, ஆன்மீகம் கலந்து இருக்கும் இனிப்பு வகை ஆகும்.
கந்தசஷ்டி நாளில் வீட்டில் தயாரிக்கும் கந்தரப்பத்தின் சுவைக்கு சமம் எதுவுமில்லை. முருகனை வழிபட்டு இந்த கந்தரப்பத்தை படைத்த பின் உண்ணும் போது சுவையுடன், கந்தனின் கருனையும் கிடைக்கும்.


























Bons Plans
Annuaire
Scan