புத்தகங்கள் வாசிப்பது மன அழுத்தத்தை குறைக்கும்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9691
தற்போதைய வாழ்க்கை முறையில் பெண்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்களாகட்டும் பணிபுரியும் பெண்களாகட்டும் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாத போது வீட்டில் உள்ளோர் மீது அதனை வெளிப்படுத்தும் நிலையும் ஏற்படும்.
இந்த அவரச யுகத்தில் டி.வி., இணையதளம் போன்ற ஊடகங்களில் நமது பெரும்பாலான நேரங்களை செலவழிக்கிறோம். அது இன்னும் நிலைமையை மோசமாக்கி விடுகிறது. ஊடகங்களில் நம் நேரத்தை செலவழிப்பதினால் வீட்டில் இருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை.
இந்த நிலையிலேயே நம் பிரச்சனைகள் நாளடைவில் மன அழுத்தமாக மாறி விடுகிறது. மன அழுத்தங்களில் இருந்து விடுபட நல்ல இசையேயோ அல்லது நாம் மிகவும் விரும்பும் பாடலையோ கேட்பதின் மூலம் குறைக்கலாம். அதோடு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். நாம் படிப்பதோடு மற்றவர்களுக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிடலாம். நல்ல புத்தகங்களை அவர்களுக்கு பரிசளிக்கலாம்.
புத்தகங்கள் அதிகம் வாசிப்போர், குறைவாக புத்தகங்கள் வாசிப்பவர்களுடன் ஒப்பிடும் பொழுது பத்தில் ஒரு பங்கு அளவே மிக குறைவாக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எனவே, வாசித்தல் என்பது மன அழுத்தத்தை வெகுவாக குறைப்பதில் பெரும் பணியாற்றுகிறது.