Paristamil Navigation Paristamil advert login

ஸ்ரீலங்கன் விமானத்தில் விமான பணிப்பெண்களைத் தாக்கிய பயணி கைது

ஸ்ரீலங்கன் விமானத்தில் விமான பணிப்பெண்களைத் தாக்கிய பயணி கைது

26 ஐப்பசி 2025 ஞாயிறு 14:44 | பார்வைகள் : 190


ஸ்ரீலங்கன் விமானத்தில் விமான பணிப்பெண்களைத் தாக்கிய பயணி ஒருவர் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பயணியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபிய பயணி ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

28 வயதான சவுதி அரேபிய நாட்டவர், சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மலேசியாவுக்குச் செல்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் UL-266இல் பயணித்துள்ளார்.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் தங்கள் இருக்கை பெல்ட்களைக் கட்டிக்கொண்டு இருக்கைகளில் அமர வேண்டியிருந்தது.

எனினும், இந்த பயணி மட்டும் அந்த விதியை மீறி கழிப்பறைக்குச் செல்ல முயன்றார். இதன்போது மோதல் ஏற்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமான ஊழியர்கள் சம்பவம் குறித்து விமானிக்கு தகவல் அளித்ததை அடுத்து, விமானம் தரையிறங்கியதும் விமானத்தின் அருகே வந்த காவல்துறை அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் இலங்கை வான்வெளியில் நடந்ததால், சந்தேகத்திற்குரிய சவூதி அரேபிய பிரஜை நாளை (27) கொழும்பு எண் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்