Notre-Dame பேராலயத்தில் அசாதாரண திருமணம்!!
26 ஐப்பசி 2025 ஞாயிறு 22:00 | பார்வைகள் : 630
பரிஸ் நோத்துறு-டாம் (Notre-Dame) பேராலயத்தில் அக்டோபர் 25, சனிக்கிழமையன்று அன்று ஒரு விசேஷமான திருமணம் நடைபெற்றுள்ளது. தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்ட பத்து மாதங்களுக்குப் பிறகு, அதன் புனரமைப்பில் பங்கேற்ற தச்சர் மார்டின் லோரன்ஸ் மற்றும் அவரது காதலி ஜேட் ஆகியோருக்கு, தேவாலயத்தின் உள்ளே திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
மூன்று ஆண்டுகள், மார்டின் மரத்தாழ்வாரத்தை மறுவடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு, நூற்றாண்டுகள் பழமையான முறையில் மரத்தடிகளை செதுக்கியிருந்தார். திருமண விழாவில் 500 விருந்தினர்கள், அதில் பல தச்சர்களும் கலந்து கொண்டனர்.
நோத்துறு-டாமில் திருமணம் செய்யும் மார்டினின் கனவு நனவாகிய நாள் அது. விழா முடிவில் சுற்றுலா பயணிகளும் தச்சர்களும் கைத்தட்டினர். “இது என் வாழ்க்கையின் அழகான நாள்,” என்றார் புதிதாக மணமுடித்த மார்டின் லோரன்ஸ். இவ்வாறு, நோத்துறு-டாம் பேராலயத்தின் வரலாற்றில் இன்னொரு இனிய நிகழ்வு சேர்க்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan