கடைசி உலகக்கிண்ணத்தில் தோல்வி: விடைபெற்ற நியூசிலாந்து கேப்டன்
27 ஐப்பசி 2025 திங்கள் 07:57 | பார்வைகள் : 114
நியூசிலாந்து மகளிர் அணித்தலைவர் சோபி டிவைன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் நேற்றையப் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இப்போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவர் சோபி டிவைன் (Sophie Devine) 35 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 23 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் 4.2 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை சாய்த்தார்.
அவர் இந்தத் தொடருடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார். சோபி டிவைன் 2006ஆம் ஆண்டு முதல் 19 ஆண்டுகள் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.
159 போட்டிகளில் விளையாடியுள்ள சோபி டிவைன், 9 சதங்கள் மற்றும் 18 பவுண்டரிகளுடன் 4,279 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இதில் அதிகபட்சம் 145 ஓட்டங்கள் ஆகும். மேலும் 75 சிக்ஸர், 410 பவுண்டரிகள் அடுத்துள்ள இவர், பந்துவீச்சில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan