Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 48 மணி நேர எச்சரிக்கை

ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 48 மணி நேர எச்சரிக்கை

27 ஐப்பசி 2025 திங்கள் 08:57 | பார்வைகள் : 266


பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் ஹமாஸ் தரப்பில் தாமதம் ஏற்பட்டு வந்ததால், இந்த விவகாரத்தில் தற்போது மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.


இந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஹமாஸ் அமைப்புக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அதில், ‘இன்னும் 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்த பணயக்கைதிகள் அனைவரின் உடல்களையும் ஹமாஸ் அமைப்பு ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால், அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள மற்ற நாடுகள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்’ என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹமாஸ் வெளியிட்ட பதிவில், ‘காஸா பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டறிந்து மீட்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது.

இதற்கு சிறப்பு உபகரணங்களும், மிகுந்த முயற்சியும் தேவைப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்