இலங்கையில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் 17,000 சிறுவர்கள்
27 ஐப்பசி 2025 திங்கள் 13:21 | பார்வைகள் : 194
மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 17,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அனைத்து மட்டங்களிலும் உள்ள சிறுவர்கள் அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எந்தவொரு சிறுவர்களையும் கைவிடாமல், ஒவ்வொரு சிறுவருக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் உயர் கல்விச் சிறந்த மாணவர்களைப் பாராட்டும் வடமேல் மாகாண நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு, இன்று (26) வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் உரையாற்றும் போதே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக வாழத் தகுதியான ஒரு நாட்டை உருவாக்க ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் கூறினார்.

























Bons Plans
Annuaire
Scan