பருவமழை குறித்து அறிய ரூ.10 கோடி மெஷின் எங்கே? நயினார் நாகேந்திரன் கேள்வி
28 ஐப்பசி 2025 செவ்வாய் 07:33 | பார்வைகள் : 181
காரைக்குடியில் பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வாக்காளர் சரிபார்ப்பு நேரு காலத்தில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், குடியுரிமைச் சட்டம் சிறுபான்மையினரை வெளியேற்றும் சட்டம் என தெரிவித்தார்.
எந்த சிறுபான்மையினரும் வெளியேற்றப்படவில்லை. ஸ்டாலின் வாக்காளர் சரிபார்ப்பு குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதற்குக் காரணம் அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. கொளத்துார் தொகுதியில் 9 ஆயிரம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
ஜூனில் 6.30 லட்சம் ஏக்கர் பயிர் நடப்பட்டு செப்.,5 ஆம் தேதி அறுவடை செய்வது குறித்து முதல்வருக்கு முன்னதாக தெரியும். தெரிந்திருந்தும் அவர், 60 சதவீதம் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. 40 சதவீதம் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பருவமழை திடீரென்று வந்ததாக கூறுகிறார்.
முன்னாள் நிதியமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் பருவ கால நிலையை அறிந்து கொள்ள ரூ.10 கோடிக்கு டெக்னிக்கல் மெஷின் வாங்கியதாக தெரிவித்தார். ரூ.10 கோடிக்கு வாங்கிய அந்த மெஷின்கள் எங்கே. அப்போதைய நிதியமைச்சர் கூறியது பொய்யா. இல்லை வேளாண் அமைச்சர் சொல்வது பொய்யா. அனைத்துமே பொய்யாகத் தான் உள்ளது.


























Bons Plans
Annuaire
Scan