ஹிந்தி மாநிலமாக தமிழகம் மாறிவிடும்: சீமான்
28 ஐப்பசி 2025 செவ்வாய் 12:33 | பார்வைகள் : 157
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
பீஹார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கானோர், வாழ்வாதாரத்துக்காக வந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி உள்ளனர். குறிப்பாக பீஹாரில் இருந்து மட்டும் ஒன்றரை கோடி பேர் வந்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் தமிழகத்தில் ஓட்டுரிமை கொடுக்க வேண்டும் என, பலர் சொல்லி வருகின்றனர். ஏற்கனவே, அவர்கள் வாயிலாக தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தி புகுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஓட்டுரிமையும் அளித்தால் அவ்வளவுதான், வட மாநிலங்கள் போல தமிழகமும் ஹிந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும்.
தமிழ் தமிழ் என கூறிக் கொண்டிருப்போரும், ஹிந்தியில் பேசும் சூழல் உருவாகி விடும். என்றைக்கு அரசியலும் அதிகாரமும் இல்லாத சூழல் உருவாகிறதோ, அன்றைக்கு இந்த சீமான், தமிழகத்தில் இருக்க லாயக்கற்றவன்; அகதியாகி விடுவேன்; நாடு கடந்து விடுவேன். அப்படியொரு சூழல் வந்துவிடக் கூடாது என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறினார்.


























Bons Plans
Annuaire
Scan